ஹாக்கி

ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி கோப்பையினை மாவட்டங்கள் தோறும் கொண்டு செல்லும் பாஸ் தி பால் பேருந்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிய மற்றும் இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது, சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற போது நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். அப்போது சென்னையிலும் சிறந்த ஹாக்கி மைதானம் உள்ளது. சென்னையில் சர்வதேச போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆஸ்கார் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள பொம்மன்-க்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் லோகோவில் பொம்மனுடன் யானை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களும் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவோம். முதலமைச்சர் கோப்பைக்காண மாநில விளையாட்டுப் போட்டியில் முறைகேடு நடக்கவில்லை சிலம்பம் போட்டியில் பங்கேற்ற ஒரு வீரர் மட்டும் குற்றச்சாட்டை முன் வைத்தார். விசாரித்த போது குற்றச்சாட்டு உண்மை இல்லை. அந்த வீரர் தோல்வியின் காரணமாக குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தெரியவந்தது. முதலமைச்சர் கோப்பை போட்டியில் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்....

இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!
இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!

ஹாக்கி உலக கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள புவனேஸ்வரில் நடந்து வருகிறது, இந்த உலக கோப்பை தொடரை இந்திய அணி கண்டிப்பாக கைப்பற்றும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள். இந்த தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றியுடன் தொடங்கினாலும் தற்போது அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய போராடி வருகிறது....

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!

இந்தியாவில் உள்ள புவனேஸ்வரில்  ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது தனது இறுதி லீக் சுற்று போட்டியில் வேல்ஸ் அணியுடன் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.இந்த போட்டியின் முடிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு செல்லும் சாத்திய கூறுகளை காண்போம்....

ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி, உலகக்கோப்பை ஹாக்கியில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இன்று நடக்கும் நிலையில், 48 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....

இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!
இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற திலீப் டிர்கி, இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஹாக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஹாக்கி தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து திலீப் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஹாக்கி இந்தியா தேர்தல்கள் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவிருந்தன, ஆனால் மற்றவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் டிர்கி ஒருமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....

சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!
சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!

இன்று ஸ்பெயினில் நடந்த மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையின் வகைப்படுத்தல் ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந் த நிலையில், சவிதா பூனியாவின் அதிரடியால் இந்தியா ஷூட் அவுட்டில் கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது....

ஒரே நேரத்தில்.. 5 பேருக்கு கொரோனா.. என்ன செய்யப் போகிறது இந்திய அணி?
ஒரே நேரத்தில்.. 5 பேருக்கு கொரோனா.. என்ன செய்யப் போகிறது இந்திய அணி?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் ஸ்டிரைக்கர் குர்ஜந்த் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் உட்பட அணியின் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

அதிர்ச்சி.. பிரபல முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மரணம்!!
அதிர்ச்சி.. பிரபல முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மரணம்!!

1970களில் இந்திய ஹாக்கி அணியின் மறக்கமுடியாத வெற்றிகளில் ஒரு அங்கமாக இருந்த ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பைப் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் இன்று காலை ஜலந்தரில் காலமானார். அவருக்கு வயது 75....

வேற லெவல் டீம்.. காமன்வெல்த்தை கலக்கப்போகும் இந்திய ஹாக்கி அணி!!
வேற லெவல் டீம்.. காமன்வெல்த்தை கலக்கப்போகும் இந்திய ஹாக்கி அணி!!

எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை ஹாக்கி இந்தியா சம்மேளனம் நேற்று அறிவித்தது. மன்பிரீத் சிங் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். மேலும் அவருக்கு துணை கேப்டனாக டிராக்-ஃப்ளிக்கர் ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்....

ஹாக்கி-5 போலந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி..!
ஹாக்கி-5 போலந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி..!

இந்தியா அதற்கடுத்து ஆடிய வெறித்தனமான ஆட்டத்தில் போலந்தை வீழ்த்தியது....